சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடை உற்பத்தியில் பருத்தியே முக்கிய பங்கினை வகிக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் விளைவிக்கப்படும் இந்தப் பருத்தியின் அறுவடை என்பது, பல கட்டங்களாக நடைபெறும் ஒரு செயல் முறையாகும்.
இது சுமார் நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை நீடிக்கிறது. பல ஆண்டுகளாகப் பருத்தியை கையால் அறுவடை செய்வதே பிரதான முறையாக இருந்து வந்தது.
ஆனால் நவீன காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை செய்யும் முறை பிரபலமடைந்து வருகிறது.
அந்த வகையில் சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன இயந்திரங்கள்மூலம் அறுவடை பணி களைக்கட்ட தொடங்கியுள்ளது.
இந்த நவீன இயந்திரம் மனிதர்களை விட 120 மடங்கு வேகமாக அறுவடை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.