பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தும் கொத்தமல்லி விதைகளை கொதிக்க வைத்து ,அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம் .
1.சிலர் உடலில் நச்சுக்கள் இருக்கும் .கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
2.சிலருக்கு செரிமான தொல்லை இருக்கும் .இந்த கொத்தமல்லி நீர் செரிமானத்தை தூண்டுவதுடன் எடை இழப்புக்கு காரணமாகிறது,
3.சிலருக்கு முடியுதிரும் .இந்த கொத்தமல்லி நீர் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன் சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும்.
4.இந்த கொத்தமல்லி நீரில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் இரும்பு சத்துக்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
5.காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
6.காரமான உணவுகளை உட்கொள்ளும் போது உடற்சூடு அதிகரிக்கும், கொத்தமல்லி தண்ணீரை பருகி வந்தால் உடல் சூடு காணாமலே போகும்
7.தினமும் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறும், 8.இந்த கொத்தமல்லி நீர் குடித்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
9.இந்த கொத்தமல்லி நீர் குடித்தால் மூட்டு வீக்கத்தை குறைப்பதன் மூலம் மூட்டு வலியை சரிசெய்கிறது.