தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு சென்றுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேற்று நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். அக்டோபரில் தொடங்க உள்ள தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க உள்ளார். அவர்களிடம் தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.