காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் லிஸ்ட்!

Estimated read time 1 min read

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்ப உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author