45 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை பற்றிய முடிவை, அப்போதைய சீனத் தலைவர் டெங் சியோ பிங் எடுத்தார். இது சீனாவின் எதிர்காலத்தைத் தீர்மானித்த முக்கிய நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணியை பன்முகங்களிலும் ஆழமாக்குவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அறிவித்தார். இது சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்கிய முக்கிய நடவடிக்கையாக மாறியுள்ளது.
45 ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவின் நபர்வாரி மொத்த தேசிய வருமானம் 190 அமெரிக்க டாலர் மட்டுமே, மிகவும் குறைந்த வளர்ச்சி நாடுகளில் இருப்பது போன்ற நிலை. சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 2 ஆயிரம் கோடிக்கு மேல் மட்டுமே இருந்தது.
சீனாவில் அன்னிய முதலீட்டு பயன்பாடு இல்லை. டெங் சியோ பிங்கின் முன்மொழிவில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு, சீனாவின் அடிப்படை தேசியக் கொள்கையாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டது. எனவே சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு, சீன வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு பெரிய புரட்சியாகும்.
கடந்த 10 ஆணடுகளில், சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கியதன் மூலம், சீனாவில் ஏறக்குறைய 10 கோடி வறிய மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். உலகில் மிக பெரிய கல்வி, சமூகக் காப்புறுதி மற்றும் மருத்துவச் சுகாதார அமைப்பு முறை கட்டியமைக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்ததைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதை, நவீனமயமாக்கலை முன்னெடுத்து, தேசிய மறுமலர்ச்சியை நனவாக்கும் அடிப்படை உந்து சக்தியாக கொள்வதாக சீனா 2022ஆம் ஆண்டில் அறிவித்தது.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு பல ஆண்டுகளாக 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளும் வளரும் நாடுகளும் சீனப் பொருளாதார வளர்ச்சியிலிருந்து மாபெரும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு இன்றி, இன்றைய சாதனை இல்லை. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கையை முழுமையாக ஆழப்படுத்தும் மனவுறுதியையும் நடவடிக்கைகளையும் இன்றி, சிறந்த எதிர்காலம் இருக்காது.