திபெத்தைப் பழிவாங்கும் கூற்றுகள் வீணாகிவிடும்

Estimated read time 1 min read

 

மக்களின் மகிழ்ச்சியானது மிகப்பெரிய மனித உரிமையாகும். 2023ஆம் ஆண்டு சீனத் திபெத் வளர்ச்சி மன்றத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் இவ்வாறு கூறினார்.
2022ஆம் ஆண்டில் திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 1951ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 346.8 மடங்கு அதிகரித்துள்ளது. அமைதியான விடுதலையின் தொடக்கத்தில் திபெத் மக்களின் சராசரி ஆயுட்காலம் 35.5 ஆண்டுகள் மட்டும். இப்போது 72.19 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. திபெத்தில் 15 ஆண்டு இலவசக் கல்வி முறையைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. எழுத்தறிவின்மை அடிப்படையில் ஒழிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சீனாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மாபெரும் வளர்ச்சி, திபெத் பொருளாதாரத்துக்குப் புதிய இயக்கு ஆற்றலை ஊட்டுகின்றது. 2022ஆம் ஆண்டில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொழிற்துறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 19 விழுக்காடாகும். அதே வேளையில் பீடபூமி சூழலைப் பாதுகாப்பதற்கும் மத்திய அரசு மிக முக்கியத்துவம் அளிக்கின்றது.
கூறப்படும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து மேற்கில் உள்ள சில அரசியல்வாதிகள் தொடர்ந்து திபெத்துக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களின் நோக்கம் பற்றி, இந்திய அறிஞர் வீ ஹான் கூறுகையில், மேற்கில் சிலர் அலுவலகத்தில் அமர்ந்து காற்று பதனாக்கியை அனுபவிக்கிறார்கள். ஆனால் திபெத் மக்கள் அவர்களைப் போன்ற நவீன நாகரிகத்திற்குள் நுழைவதை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
சீனா நன்றாக இருப்பதால் திபெத் நன்றாக உள்ளது. உண்மைகளை எதிர்கொண்டு, திபெத்தைப் பழிவாங்கும் கூற்றுகள் இறுதியில் வீணாகிவிடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author