சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
சட்டபூர்வமான அனுமதி இல்லாதவர்கள் நாட்டில் வேலை தேடுவதை சாத்தியமற்ற சூழலை உருவாக்குவதே இந்தக் கடுமையான விதியின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், அனைத்து முதலாளிகளும் தங்களின் ஊழியர்களின் சட்டபூர்வமான வேலை நிலையைச் சரிபார்க்கும் வகையில், ஒரு டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்பு அமைப்பு பயன்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர்
