400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி  

Estimated read time 0 min read

லக்னோவில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஏ அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கே.எல்.ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் அபாரச் சதங்களின் உதவியுடன், 412 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கைத் துரத்தி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
ஏ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் துரத்திய முதல் அணி என்ற மாபெரும் சாதனையை இதன் மூலம் இந்தியா ஏ அணி பதிவு செய்தது.
போட்டியின் கடைசி நாளில், இந்திய அணியின் வெற்றிக்கு ராகுல் மற்றும் சுதர்சனின் பொறுப்பான ஆட்டம் அடித்தளமிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author