நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேஜா 2 திரைப்படம் பிப்ரவரி 17ஆம் நாள் திரையிடப்பட்டது.
ஐ.நாவின் துணைப் பொதுச் செயலாளர், ஐ.நாவுக்கான பிரான்ஸ், ரஷியா, கிரேக்கம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகள், ஐ.நா தலைமையகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஐ.நா மற்றும் வட அமெரிக்காவுக்கான சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளர் அலுவலகத்தின் பொறுப்பாளர் கூறுகையில், நேஜா 2 திரைப்படம் வட அமெரிக்காவில் திரையிடப்பதற்கு பிறகு, சீனப் பண்பாட்டின் மீது உள்ளூர் மக்களின் ஆர்வம் அதிகரித்தது. பல்வேறு நாடுகள் நாகரிகங்களை ஒன்றுடன் ஒன்று பகிர்ந்து கொள்வது என்ற ஐ.நாவின் முன்மொழிவுக்கு இது பொருந்தியது என்றார்.
ஐ.நாவின் துணைப் பொதுச் செயலாளர் ஷு ஹௌலியான் கூறுகையில், நேஜா 2 திரைப்படம் உலகத்தின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடுவது, பல்வேறு நாடுகளுடனான சீனாவின் பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றியுள்ளது. மேலும், சீனாவின் கார்ட்டூன் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, சர்வதேச முன்னணியில் உள்ளதை இத்திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.