காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலுக்குப் பிந்தைய காசாவின் எதிர்காலம் குறித்த அமெரிக்காவின் இந்தத் திட்டம், முக்கியமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காசாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை முற்றிலுமாகக் களைய வேண்டும் என்ற இரு முக்கிய நிபந்தனைகளை முன்வைக்கிறது.
இந்தத் திட்டத்தின்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து, முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும்.
காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா
