கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தச் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தலா ரூ.2 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (செப்டம்பர் 27) மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் ஏற்பட்ட நெரிசல்தான் இவ்வளவு பெரிய உயிர் சேதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; விஜய் அறிவிப்பு
