காவலரின் கையை கடித்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொண்டர்!  

Estimated read time 1 min read

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில், அதையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால், போலீசாருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்ய முயன்றபோது, அங்கே இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர், தடுத்து நிறுத்திய காவலர் ஒருவரின் கையைப் பிடித்துக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கேட் மீது ஏறி குதித்து பார் பகுதிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோதுதான் இந்த அத்துமீறிய செயல் அரங்கேறியுள்ளது. கடிக்கப்பட்ட காவலருக்குக் கையில் காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி மற்றும் விஷமுறிவு ஊசி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளிக்கு அருகில் மதுபானக் கூடம் அமைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியவர்கள், காவலரின் கையை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author