தேசிய பொருளாதாரம்மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் குறித்து சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு 29ஆம் நாள் நடத்திய கூட்டத்தில்
ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய
கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் தலைமை தாங்கினார்.
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு கூட்டம் அக்டோபர்
20முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளதாக கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,
15ஆவது ஐந்தாண்டு திட்டங்களின் வகுப்பு குறித்து கட்சிக்குள் மற்றும் கட்சி சாராத
அளவில் சேகரிக்கப்பட்ட முன்மொழிவுகளை அரசியல் குழு கேட்டறிந்து விவாதித்தது. இது
பற்றி தொகுக்கப்பட்ட ஆவணம் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு
கூட்டத்திடம் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.