சீன ஊடகக் குழுமமும் சீனாவுக்கான ஐ.நா அமைப்பு முறையும் கூட்டாக நடத்திய ஐ.நா நிறுவப்பட்ட 80ஆம் ஆண்டு நிறைவுக்கான சீனா தலைப்பிலான நிகழ்ச்சி மற்றும் ஓர் ஊர் என்ற உலக இளைஞர்களின் காணொளி கண்காட்சி செப்டம்பர் 23ஆம் நாள் துவங்கின. இதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியோங், ஐ.நாவின் உலகத் தகவல் தொடர்புப் பிரிவின் துணை தலைமை செயலாளர் மெலிசா ஃப்ளெமிங் ஆகியோர் கானொளி வழியாக உரைநிகழ்த்தினர். ஐ.நா அதிகாரிகள், சீனாவுக்கான பன்னாட்டு தூதர்கள் உள்ளிட்ட 100க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர்.
ஷென்ஹாய்சியோங் கூறுகையில், ஐ.நா. பன்னாட்டு செய்தி ஊடகங்கள் மற்றும் உலக இளைஞர்களுடன் இணைந்து, காணொளி வழியாக, தப்பு எண்ணங்களையும், கருத்து வேற்றுமைகளையும் கலைத்து மனித குலத்தின் பொது எதிர்கால சமூகம் என்ற முன்மொழிவை மக்களின் மனத்தில் ஆழமாகப் பதித்து உலக நிர்வாக முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை முன்னேற்ற சீன ஊடகக் குழுமம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
