சீன மக்கள் குடியரசின் ஹூவாங்யென் தீவுக்கான உரிமைக் கடற்பரப்பின் அடிப்படை கோடு பற்றிய அறிக்கையையும் தொடர்புடைய கடற்பரப்புப் படங்களையும் ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தர பிரதிநிதி கென்ஷூவாங் டிசம்பர் 2ஆம் நாள் சீன அரசின் சார்பில் ஐ.நா தற்காலிகத் துணைப் பொது செயலாளர் மதியாஸிடம் ஒப்படைத்தார்.
ஹூவாங்யென் தீவு சீனாவின் உரிமைப் பிரதேசமாகும். இவ்வாண்டின் நவம்பர் 10ஆம் நாள், ஐ.நாவின் கடல் சார் பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள், சீன மக்கள் குடியரசின் உரிமைக் கடற்பரப்பு மற்றும் அதன் தொடர்புடைய பகுதி எனும் சட்டம் ஆகியவற்றின்படி, ஹூவாங்யென் தீவின் உரிமைக் கடற்பரப்பின் அடிப்படை கோட்டைச் சீனா வரையறுத்துள்ளது.
கடல் சார் நிர்வாகத்தைச் சீன அரசு வலுப்படுத்துவதற்கான இயல்பான நடவடிக்கை இதுவாகும். சர்வதேச சட்டத்துக்கும் சர்வதேச நடைமுறைக்கும் இது ஏற்றதாகும்.