அல்ஜீரியாவின்தலைமையமைசராக தேர்ந்தெடுக்கப்பட்ட சஃபி கலிபுக்கு சீனத் தலைமையமைச்சர்
லீச்சியாங் செப்டம்பர் 30ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அவர்
கூறுகையில், சீன-அல்ஜீரியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 67 ஆண்டுகளாக, இரு
தரப்புறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. இரு நாடுகள் எப்போதுமே மனம் ஒருமித்து,
ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன என்றார். மேலும், சீன-அல்ஜீரிய உறவின்
வளர்ச்சிக்கு சீன அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தலைமையமைச்சர் சஃபி கலிபுடன்
இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்தக் கருத்துக்களைச்
செயல்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை மற்றும்
பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-அல்ஜீரியப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி
உறவின் மேலதிக வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.