கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழகமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் வெளியிடப்பட்ட FIR நகலில், கட்சி பெயர் “தமிழக வெற்றிக் கழகம்” என இருக்க வேண்டிய இடத்தில், “தமிழக மக்கள் கட்சி” என தவறாக பதிவிடப்பட்டிருப்பது வெளிச்சம் கண்டுள்ளது.

சம்பவத்துக்கான விசாரணை மற்றும் சட்டநடவடிக்கை குறித்து மாநிலம் முழுவதும் கவனம் செலுத்தப்பட்டுள்ள வேளையில், இந்த தவறான பதிவே சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை தூண்டியுள்ளது.
ஒரு பக்கம், இந்த பேரிழப்புக்கான காரணிகள் யார் என்ற விவாதம் சூடுபிடித்து வரும் நிலையில், FIR-இல் கட்சி பெயர் தவறாக பதிவானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த தமிழ்நாடு இந்த வழக்கின் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட தவறுகள் ஏற்படுவது குறித்து பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு, அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
