கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் பிரபல பத்திரிகையாளர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் சமூக ஊடகங்களில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து நடக்கும் இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.