அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை… எப்போது தெரியுமா?…!!! 

Estimated read time 0 min read

புதுடெல்லில் அக்டோபர் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், பண்டிகை காரணமாக அதிக நாட்களுக்குள் மூடப்பட உள்ளன. மாநிலங்களுக்கு ஏற்ப உள்ளூர் திருவிழாக்கள், தேசிய நினைவு நாட்கள் ஆகியவற்றின் காரணமாக, வங்கிகள் குறைந்தது 15 நாட்களுக்கு மேல் இயங்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வழக்கம்போல, அக்டோபரில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் (அக்.5, 12, 19, 26) மற்றும் இரண்டாவது சனிக்கிழமை (அக்.11), நான்காவது சனிக்கிழமை (அக்.25) ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது. இதற்குப் பிறகு, முக்கியமான பண்டிகை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என்பதால், பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 1ஆம் தேதி மகாநவமி, தசரா, விஜயதசமி மற்றும் துர்கா பூஜை பண்டிகைகள் காரணமாக, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். அதன்பின்னர் அக்டோபர் 2 அன்று, காந்தி ஜெயந்தி மற்றும் தசரா ஆகியவற்றுக்காக நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது.

அக்டோபர் 20 முதல் 23 வரையிலான நாட்கள் தீபாவளி பண்டிகைகள் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 20 அன்று நரக சதுர்த்தசி மற்றும் காளி பூஜை பண்டிகை நடைபெறும் மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. தொடர்ந்து, 21, 22, 23 ஆகிய நாட்களில் லட்சுமி பூஜை, கோவர்தன் பூஜை, பாய் தூஜ் போன்ற பண்டிகைகள் காரணமாக மாநிலங்களை பொருத்து வங்கிகள் மூடப்படும்.

மேலும், அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் ‘சத் மஹாபர்வ’ என்ற உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு மேற்குவங்கம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக குஜராத்தில் மட்டுமே வங்கிகள் செயல்படாது.

மாநிலங்களை பொருத்து இந்த விடுமுறை நாட்கள் மாறுபடும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது தேவையான வங்கிப் பணிகளை முறையாக திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். தாமதங்களை தவிர்க்கவும், அவசர தேவைகளை நிர்வகிக்கவும், வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறை அட்டவணையை சரிபார்த்து செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author