“மீண்டும் ஒரு போர் மூளும் அபாயம்”… வானில் வட்டமடித்த போர் விமானங்கள்… ஆக்கிரமிக்க துடிக்கும் சீனா… தைவான் கடும் எச்சரிக்கை…!!!! 

Estimated read time 1 min read

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து 1949-ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்த தைவான், தன்னைச் சொந்த நாடாகவே சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.

தேவையான நேரத்தில் தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தையும் சீனா வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறது.

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் தலையிடுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள தைவான், தங்களுக்கு தனித்த இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதாகவும், எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் தாங்கள் இல்லை என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தைவான் எல்லைப் பகுதிகளில் சீனா அவ்வப்போது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் தைவான் கடற்பகுதியில் சீனாவின் 11 போர்க்கப்பல்களும், 7 போர் விமானங்களும் தைவான் எல்லையைச் சுற்றி வளைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு அல்லது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம், தைவான்-சீனா இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author