ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பயனர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலகளவில் உள்ள தனது 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், பிரைம் சந்தா விலை அதிகரித்து வருவதாகவும், பெறுநர்களை சந்தாவை ரத்துசெய் பட்டனைக் கிளிக் செய்யுமாறு வலியுறுத்துவதாகவும் இந்த மோசடி மின்னஞ்சல்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பட்டன் பாதிக்கப்பட்டவர்களை உள்நுழைவு சான்றுகள் மற்றும் கட்டண விவரங்களைத் திருட வடிவமைக்கப்பட்ட ஒரு நம்பகமான தோற்றமுடைய வலைத்தளத்திற்கு திருப்பி விடுகிறது.
இந்த மோசடி மின்னஞ்சல்களில் பெரும்பாலும் வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பதால், இது உண்மையானது மாதிரியே தோற்றமளிக்கும் என்று அமேசான் விளக்கியது.
நீங்கள் அமேசான் பிரைம் சந்தாதாரரா? இந்த மோசடியில் சிக்கிடாதீங்க
