பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் உயிரிழப்பு  

Estimated read time 0 min read

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கம், பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
நில அதிர்வுகள் உணரப்பட்டவுடன் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேறி, வீதிகளில் பதறியடித்து ஓடினர்.
மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன.
இதில் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்பதில் தெளிவான தகவல் இல்லை.

You May Also Like

More From Author