சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76ஆவது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 30ஆம் நாள் மாலை பெய்ஜிங்கில் உள்ள மக்கள்
மாமண்டபத்தில் விருந்தளிப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர்
ஷிச்சின்பிங் முக்கிய உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சீனத் தேசத்தின்
மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவது, வரலாற்றில் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட
இலட்சியமாகும். ஒவ்வொரு நாளைகளையும் பிடித்து, எப்பொழுதும் தளர்ந்து போகாமை போன்ற எங்கள்
எழுச்சியை எதிர்பார்ப்புகளும் அறைக்கூவல்களும்
ஊக்குவிக்கும் என்றும், நாங்கள் கட்சி மத்திய கமிட்டியைச் சுற்றி நெருக்கமாக
ஒன்றுபடவும், உறுதியுடன் முன்னேறவும், கடினமாக உழைக்கவும், சீனப் பாணியுடைய
நவீனமயமாக்க கட்டுமானத்துக்காக முயற்சி எடுக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுமார் 800 உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டினர்கள் மகிழச்சியுடன் கலந்து கொண்டனர்.
