AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Perplexity, அதன் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) உலாவி ஆன Comet-ஐ இப்போது உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் கூகிள் குரோம் மற்றும் சஃபாரிக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த AI பிரவுசர், இதுவரை ஒரு அழைப்பு-மட்டும் (Invite-only) தளமாக அல்லது கட்டணச் சந்தா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.
தற்போது, நீண்ட காத்திருப்புப் பட்டியலில் இருந்த பயனர்கள் உட்பட அனைவரும் Comet உலாவியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Comet உலாவியைப் பதிவிறக்கம் செய்ய, பயனர்கள் Perplexity-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
Perplexity-யின் Comet AI பிரௌசர் இப்போது அனைவருக்கும் இலவசம்!
