சீன வணிகத் துறை அமைச்சம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் முதலிய 8 வாரியங்கள், மே 26ஆம் நாள், எண்ணியல் மற்றும் நுண்ணறிவு வினியோக சங்கலியின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் திட்டம் ஒன்றை வெளியிட்டன. இதன்படி, வேளாண் துறை, ஆக்க தொழில் துறை, மொத்த மற்றும் சில்லறை விற்பனை துறை உள்ளிட்டவற்றில், எண்ணியல் மற்றும் நுண்ணறிவு வினியோக சங்கலியின் வளர்ச்சியைக் குறிப்பாக வலுப்படுத்த வேண்டும். சமூகத்தின் சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, எண்ணியல் மற்றும் நுண்ணறிவு வினியோக சங்கலியின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வினியோக சங்கிலி மைய நகரங்களை வளர்க்க வேண்டும்.
2030ஆம் ஆண்டுக்குள், சீனத் தேசியளவில் 100க்கு மேலான எண்ணியல் மற்றும் நுண்ணறிவு வினியோக சங்கலியின் நிறுவனங்கள் வளர்க்கப்பட வேண்டும். சீன தொழில் சங்கிலி மற்றும் வினியோக சங்கிலியின் நிதானம் மற்றும் பாதுகாப்புத் தன்மை மேலும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.