ஜூன் 3முதல் 5ஆம் நாள் வரை, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் டியேநிங்கின் தலைமையிலான பிரதிநிதிக் குழு பிரேசிலில் பயணம் மேற்கொண்டு 11ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற கருத்தரங்கில் பங்கேற்றுள்ளது.
இப்பயணத்தின் டியேநிங், பிரேசில் செனெட் அவைத் தலைவர் டேவி அல்கொலம்ப்ரே, பிரதிநிதிகள் அவைத் தலைவர் ஹ்யூகோ மோட்டா ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.
தெற்குலகின் மிகப் பெரிய பங்களிப்பான பிரிக்ஸ் நாடுகள் அமைப்பானது எப்போதும் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சியில் உறுதியாக நின்று அவற்றைச் செயல்படுத்துகின்றது என்று டியேநிங் இக்கருத்தரங்கில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.
பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும். தெற்குலகின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழப்பாடுத்தி புதிய ரக தொழில்களின் வளர்ச்சிக்குரிய உந்து ஆற்றலை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.