சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப
அமைச்சகம், சரக்கு போக்குவரத்து அமைச்சகம், பெய்ஜிங் மக்கள் அரசாங்கம் ஆகியவை
கூட்டாக ஏற்பாடு செய்த 2025 உலக நுண்ணறிவு இணைய வாகன மாநாடு, அக்டோபர் 16ம் நாள்
முதல் 18ம் நாள் வரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில்
நுண்ணறிவைப் பயன்படுத்துதல், வரம்பற்ற இணைப்பை அடைதல் என்ற
தலைப்பில், தொழில், தொழில் நுட்பம், ஒத்துழைப்பு ஆகிய மூன்று துறைகள் தொடர்பான
முன்னேற்றங்கள் உலகிற்கு எடுத்துக்காட்டப்படும். செயற்கை நுண்ணறிவு, தகவல்
தொடர்பு, தரவுகளின் பயன்பாடு முதலிய முன்னேறிய தொழில் நுட்பங்கள் பற்றிய வாகனத்
தொழில் புத்தாக்கம், இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படும். பன்னாட்டு அரசு
நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் சீனாவின் நுண்ணறிவு இணைய
வாகனத் தொழிலின் புதிய சாதனைகளும், தொழில் போக்கும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று
தெரிய வந்துள்ளது.
படம்:VCG