சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பொலிவிய அரசுத் தலைவர் அல்சேவும் 9ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
சீன-பொலிவிய உறவு வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். அல்சேவுடன் இணைந்து, இரு நாட்டு பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவைப் புதிய கட்டத்துக்கு வளர்க்கப் பாடுபட விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.