8ஆவது உலக அறிவியல் தொழில்
நுட்பப் புத்தாக்க மாநாடு 8ஆம் நாள், தென்னாப்பிரிக்காவின் பிரேடோரியாவில் தொடங்கியது.
தொடரவல்ல வளர்ச்சிக்குத் துணை நிற்கும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும். பெல்ஜியத்தின் ஃபிளேண்டர்ஸ் தொழில் நுட்ப ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த குவாங்சோ எரியாற்றல் ஆய்வகம் உள்ளிட்டவை இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கின.
3 நாட்கள் நீடிக்கும் இம்மாநாட்டில், காலநிலை, எரியாற்றல், சுகாதாரம், தண்ணீர், வேளாண்மை, பாதுகாப்பு, சுழற்சிப் பொருளாதாரம் உள்ளிட்ட 7 தலைப்புகள் வாய்ந்த கிளை கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. ஆப்பிரிக்காவில் முதன்முறையாக நடத்தப்படும் உலக அறிவியில் தொழில் நுட்ப புத்தாக்க மாநாடானது ஆப்பிரிக்காவின் தூய்மையான எரியாற்றல் ஏற்பாட்டுக்கும் தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதற்கும் முக்கியத் தொழில் நுட்ப ஆதரவையும் ஒத்துழைப்பு வழிமுறைகளையும் கொண்டு வரும்.