விண்வெளி இயற்பியலாளர் அவி லோப் தலைமையிலான ஹார்வர்ட் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மர்மமான விண்மீன் இடையேயானப் பொருள் (Interstellar Object) ஆன 3I/ATLAS ஒரு வேற்றுக் கிரக விண்கலமாக இருக்கலாம் என்று முன்மொழிந்துள்ளது.
உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பொருள், 12 மைல்களுக்கு (19 கிமீ) மேல் அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது டிசம்பர் 19, 2025க்குள் பூமியில் இருந்து 17 மில்லியன் மைல்களுக்குள் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான விண்கற்கள் அல்லது வால்மீன்களைப் போலன்றி, 3I/ATLAS ஆனது விவரிக்க முடியாத முடுக்கம் மற்றும் அதன் பாதையில் புவியீர்ப்பு விதிகளுக்கு முரணான அசைவுகளைக் காட்டுகிறது.
பூமிக்கு அருகே வரும் 3I/ATLAS மர்மப் பொருள் வேற்று கிரக விண்கலமா?
