ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 13056 சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டிகள் இயக்கம்

Estimated read time 1 min read

சீனத் தேசிய இருப்புப்பாதைக் குழுமம் வெளியிட்ட தரவின்படி,
இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, மொத்தமாக 13ஆயிரத்து 56 சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு மொத்தமாக 13லட்சத்து 99ஆயிரம் சரக்குக் கொள்கலன்கள் அனுப்பப்பட்டன.

கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, முறையே 12விழுக்காடு மற்றும் 11விழுக்காடு அதிகரித்தன. மேலும், இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 1653 சரக்குத் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 73ஆயிரம் சரக்குக் கொள்கலன்கள் அனுப்பப்பட்டன.

இவ்வாண்டு முதல், மாதத்தோறும் இயக்கப்பட்ட சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 மாதங்களாக 1600ஐத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author