அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தின்பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் அண்மையில் சீன ஊடகக் குழுமத்திற்குப் பேட்டியளித்த
போது சீனா ஈட்டியுள்ள சாதனைகளைப் பாராட்டினார். அவர் கூறுகையில், 40க்கும் அதிகமான
ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு முதன்முறையாக வந்தது முதல் இதுவரை, பெரிய நாட்டின்
மாபெரும் மாற்றங்களை நேரில் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். சீனாவின் சாதனைகள் சீன
மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வருவதோடு, உலக பன்னாடுகள் குறிப்பாக வளரும்
நாடுகளுக்கு அரிய மிக்க அனுபங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்கா ஒருதரப்புவாதத்தைக் கைவிட்டு
உண்மையாகவே தொலைநோக்குப் பார்வைக்கு மாறி சீனாவுடன் தூதாண்மைப் பரிமாற்றத்தையும்
பேச்சுவார்த்தையையும் நடத்த வேண்டுமென விரும்புவதாக அவர் கூறினார்.