தென் கொரிய அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் தொலைபேசி உரையாடல்

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் காலை தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார்.

தென் கொரிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லீ ஜே-மியுங்கிற்கு ஷிச்சின்பிங் மீண்டும் வாழ்த்து தெரிவித்தார். சீனாவும் தென் கொரியாவும் அண்டை  நாடுகளுக்கான நட்புறவு கொள்கையில் ஊன்றி நிற்க வேண்டும். ஒன்றுக்கொன்று நன்மை மற்றும் கூட்டு வெற்றி தருவதில் ஊன்றி நிற்க வேண்டும். இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை மேலும் உயர்ந்த நிலைக்கு முன்னெடுத்து இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க வேண்டும். மோதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்திருக்கும் பிரதேசம் மற்றும் சர்வதேச நிலைமைக்கு மேலதிக உறுதித் தன்மையை அளிக்க வேண்டும்  என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தென் கொரிய-சீன உறவில் பெரும் கவனம் செலுத்தி வருகிறேன் என்று லீ ஜே-மியுங் தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து இரு தரப்பின் நட்பு அண்டை நாட்டுறவு மேலும் ஆழமாக வளர்வதை முன்னேற்றி இரு நாட்டு மக்களின் உணர்ச்சியை அதிகரித்து இரு நாட்டு ஒத்துழைப்புகளில் மேலதிக சாதனைகளைப் பெற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author