இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
இஸ்ரேலுக்கு புறப்பட்டபோது காசாவில் போர் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.
அவர், எகிப்தில் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு முன்பு, நெசெட்டில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“போர் முடிந்துவிட்டது, நீங்கள் அதைப் புரிந்துகொள்கிறீர்கள்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து கேட்டபோது, ”அது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
