பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதன் மூலம், அடுத்த 18 மாதங்களில் பாகிஸ்தான் பூர்த்தி செய்ய வேண்டிய மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
நிதி மேலாண்மை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்கள் குறித்த கடுமையான மேற்பார்வை ஆட்சியை எதிர்கொள்ளும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக மாறியுள்ளது.
வியாழக்கிழமை (டிசம்பர் 11) வெளியிடப்பட்ட ஐஎம்எஃப்பின் இரண்டாவது ஆய்வு அறிக்கை ஊழியர் மட்ட அறிக்கையின்படி, புதிய உத்தரவுகள் குறிப்பாக ஊழலை எதிர்த்துப் போராடுவது, நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் வரி அமைப்பைச் சீர்திருத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; ஐஎம்எஃப் நிதியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதிப்பு
