இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
மொத்தம் ரூ.24,470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 103 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் திறக்கப்பட்ட ரயில் நிலையங்கள்:
பரங்கிமலை
ஸ்ரீரங்கம்
போளூர்
திருவண்ணாமலை
விருதாச்சலம்
சாமல்பட்டி
குழித்துறை
சிதம்பரம்
மன்னார்குடி
