கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

Estimated read time 0 min read

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சிற்றருவி, மெயின் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைப் பெய்வதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உள்ள ஐந்தருவி, சிற்றருவி, மெயின் அருவிகளில் பாதுகாப்பு கம்பிகளைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

எனவே அங்கு குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புலி அருவி, பழைய குற்றால அருவியில் நீர்வரத்து மிதமாக உள்ளதால் அங்கு குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author