பொருளாதாரப் பணிகள் குறித்து சீனத் தலைமை அமைச்சர் கருத்து

பொருளாதார நிலைமை குறித்து நிபுணர்கள் மற்றும்தொழில் முனைவோரின் கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இதற்குத் தலைமை தாங்கி, தற்போதைய பொருளாதார
நிலைமை மற்றும் அடுத்த கட்ட பொருளாதாரப் பணிகள் குறித்த கருத்துக்களையும்
முன்மொழிவுகளையும் கேட்டறிந்தார்.

அவர் கூறுகையில், இவ்வாண்டில் சிக்கலான
வெளிப்புறச் சூழல் மற்றும் பொருளாதார இயக்கத்தில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்ட
நிலையில், ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின்
தலைமையில், ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கையை பல்வேறு பிரிவுகள்
நடைமுறைப்படுத்தி, பொருளாதார மீட்சியை முழு முயற்சியுடன் முன்னேற்றி வருகின்றன
என்று தெரிவித்தார்.

தொழில் முனைவோர்கள், தொடர்ந்து புத்தாக்கத்தை
முன்னெடுப்பதில் நெடுநோக்கு பார்வையுடன் ஊன்றி நிற்க வேண்டும் என்றும் நிபுணர்கள்,
தொழில் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பொருளாதாரப் பணிகளுக்கு முன்மொழிவுகளை வழங்க
வேண்டும் என்றும் லீச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author