குன்மிங் சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில், சீன-லாவோஸ் இருப்பு பாதையின் மூலம், 1540 கோடி யுவான் மதிப்புள்ள 34 இலட்சத்து 30 ஆயிரம் டன்னுடைய சரக்குகள் ஏற்றியிறக்கப்பட்டுள்ளன.
இது, கடந்த ஆண்டை விட முறையே 6 விழுக்காடாகவும் 41 விழுக்காடாகவும் அதிகரித்து வருகிறது. தற்போது, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட 19 நாடுகளுக்கு, சீன-லாவோஸ் இருப்புப் பாதை செல்கின்றது.
ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் 500 வகைகளிலிருந்து 3600 வகைகளாக அதிகரிக்கத்துள்ளன. இந்த இருப்புப் பாதை இப்பிராந்திய பொருளாதாரத்தின் செழுமை மற்றும் வளர்ச்சிக்கு புதிய உயிர் ஆற்றலைக் கொண்டு வருகிறது.
