கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த உதவும் நோக்குடன், பிரிக்ஸ் அமைப்பின் நிதிக் கிளையான புதிய வளர்ச்சி வங்கியில் (NDB) உறுப்பினராகச் சேர சீனாவின் ஆதரவை முறைப்படி நாடியுள்ளது.
பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் வாஷிங்டனில் சீன துணை நிதி அமைச்சர் லியாவோ மின்னைச் சந்தித்தபோது இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் சேருவதற்கான சீனாவின் ஆதரவைக் கோரிய அவுரங்கசீப், தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், தொழில் மற்றும் கனிமங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சீன நிறுவனங்களின் முதலீட்டை வரவேற்பதாகவும் பாகிஸ்தான் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
