மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

மேற்கு வங்கம், கிழக்கு மெடினிபூர் மாவட்டத்தில் இன்று காலை, NIA அதிகாரிகள், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்று கொண்டிருந்தபோது, பூபித்தானி நகர் பகுதியில் அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்களை தாக்கியது.

இந்தத் தாக்குதலில் என்ஐஏ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் NIA அதிகாரிகள் பயணித்த காரும் சேதமடைந்தது.

குண்டுவெடிப்பு வழக்கில் மனபேந்திரா ஜனா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author