15ஆம் நாள்,சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் தென்கொரிய அரசுத்தலைவர் யூன் செயொக் யூலுடன் லீமாவில் சந்தித்து பேசினார்.
2022ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இந்தோனேசியாவின் பாரி தீவில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, அவர்கள் பெரு நாட்டில் மீண்டும் சந்திப்பு நடத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச மற்றும் பிரதேச நிலைமையிலான மாற்றங்கள் குறித்து ஷி ச்சின்பிங் பேசுகையில், சீனாவும் தென்கொரியாவும் அண்டை நாட்டு நட்புறவையும் பரஸ்பர நலன் தரும் கூட்டு செழுமை பெறும் இலக்கையும் உறுதிப்படுத்தி, பரிமாற்றத்தை வலுப்படுத்தி ஒத்துழைப்பை ஆழமாக்கி, இருநாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைய முன்னேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.