136ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாள் முதல் நவம்பர் 4ஆம் நாள் வரை, 3 காலகட்டங்களாக நடைபெற்றது. இதன் மொத்த பரப்பளவு 15 இலட்சத்து 50 ஆயிரம் சதுரமீட்டராகும்.
இதில் மொத்தமாக 74 ஆயிரம் பொருட்காட்சி இடங்கள் இடம்பெற்றன. 55 பிரிவுகளில் 171 சிறப்பு பகுதிகள் உள்ளன. 11 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், நடப்புப் பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பசுமையான உற்பத்திப் பொருட்கள் மற்றும் தற்சார்பு அறிவு சொத்துரிமை கொண்ட பொருட்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட பெரிதும் அதிகரித்துள்ளது.
இப்பொருட்காட்சியானது புதிய உற்பத்திப் பொருட்களைக் காட்சிக்கு வைப்பது, வணிக வாய்ப்புகளைத் தேடுவது மற்றும் வளர்ச்சிக்கான புதிய முன்னேற்றத்தை அறிந்துகொள்வதற்குரிய ஜன்னலாக விளங்குகிறது.
தவிரவும், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் புதிய வளர்ச்சி ஆற்றலைத் தீவிரமாக்கி, புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கூட்டாக பகிர்ந்துகொள்வதற்குரிய வாயிலாகவும் இப்பொருட்காட்சி திகழ்கிறது. இப்பொருட்காட்சியின் மூலம் சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு மென்மேலும் விரிவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.