ஏபெக் உச்சிமாநாடு தற்போதைய சர்வதேச அரசியல் அமைப்பு முறையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்றும் அதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் சர்வதேச பிரமுகர்கள் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்கள்.
ஹங்கேரியின் ஐரோப்பிய மற்றும் ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநர் லெவென்டே கூறுகையில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்பில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்பு மேற்கொண்டு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி தரும் அடிப்படையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முன்மொழிவுகளில் மேதிலக நாடுகள் சேர விரும்புகின்றன என்றும், இத்தகைய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு ஏபெக் உச்சிமாநாடு மேடையை வழங்கும் என்றுத் தெரிவித்தார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                             
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                