அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
அரிய வகை கனிமங்கள் உட்படப் பரந்த அளவிலான பொருட்களுக்கான பெரிய அளவிலான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை சீனா விதித்ததற்கு நேரடியான பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், அத்தகைய செயல் சர்வதேச வர்த்தகத்தில் கேள்விப்படாத ஒரு ஒழுக்கக்கேடான செயல் என்றும் குற்றம் சாட்டினார்.
சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப்
