மகாகவி பாரதியார்

Estimated read time 1 min read

Web team

IMG-20240703-WA0040.jpg

நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி!

கவிஞர் இரா. இரவி

மகாகவி என்றால் மண்ணில் பாரதி தான்
மகாகவி பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவன் !

பாடிய பாடலுக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லை
பாடியபடியே வாழ்ந்து சிறந்தவன் பாரதி!

வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி
வறுமைக்கு அஞ்சாமல் போரிட்டு வாழ்ந்தவன் பாரதி !

சொற்களின் சுரங்கமாகத் திகழ்ந்தவன் பாரதி
சொக்க வைக்கும் பாடல்களை தினமும் யாத்தவன்!

விடுதலை வேள்வியை கவிதையால் நிகழ்த்தியவன்
விடுதலை வேட்கையை பாட்டால் விதைத்தவன்

முண்டாசு கட்டி முத்தமிழை வளர்த்தவன் பாரதி
முன்கோபம் வந்தாலும் குணமிக்கவன் பாரதி !

காந்தியடிகளை அழைத்து வேறு கூட்டம் என்றதும்
கோபிக்காமல் திட்டமிட்ட நாளில் நடக்கும் என்றவன் !

காந்தியடிகளை வாழ்த்தி கவி வடித்தவன் பாரதி
காந்தியடிகளை காத்திடச் சொன்ன புலவன் பாரதி !

செல்லம்மாளின் செல்லக் கணவன் பாரதி
செல்லம்மாவிற்கு சிரமங்கள் பல தந்தவன் பாரதி !

பெண் விடுதலை மண் விடுதலை பாடியவன் பாரதி
பெண் புதுமைப்பெண் பாட்டில் வடித்தவன் பாரதி !

எட்டயபுரத்தில் பிறந்த எட்டாத உயரம் சென்றவன் பாரதி
எண்ணியதை எண்ணியபடி வாழ்ந்து உயர்ந்தவன் பாரதி !

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறான் பாரதி
நுட்பமான பாடல்களில் என்றும் வாழ்வான் பாரதி !

Please follow and like us:

You May Also Like

More From Author