ஜனவரி முதல் மே திங்கள் வரை, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 2 இலட்சத்து 75 ஆயிரத்து 438 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.4 விழுக்காடு அதிகமாகும்.
இக்காலத்தில் இந்த தொழில் நிறுவனங்களிலுள்ள பெரும் பங்கு முதலீட்டைக் கொண்ட அரசு சார் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 94 ஆயிரத்து 384 கோடி யுவானாகும்.
இது கடந்த ஆண்டை விட 2.4 விழுக்காடு குறைவாகும். பங்கு முதலீட்டு முறை தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம், 2இலட்சத்து 5 ஆயிரத்து 105 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 1 விழுக்காடு அதிகமாகும்.
வெளிநாட்டு மற்றும் ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் முதலீட்டுக்கான தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 68ஆயிரத்து 278 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 12.6 விழுக்காடு அதிகமாகும். தனியார் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 73ஆயிரத்து 293 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 7.6 விழுக்காடு அதிகமாகும்.
இதே போல் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் வருமானம் 53 இலட்சத்து 3ஆயிரம் கோடி யுவானாகும்.
இது கடந்த ஆண்டை விட 2.9 விழுக்காடு அதிகமாகும். அந்த தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவு 45 இலட்சத்து 27 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 3.0 விழுக்காடு அதிகமாகும்.
இத்தொழில் நிறுவனங்களின் வருமான லாப விகிதம் 5.19 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டை விட 0.02 விழுக்காடு அதிகமாகும்.