6ஆவது சர்வதேச பசுமை தாவரங்களின் பாதுகாப்பு நுட்ப புத்தாக்க கூட்டமும், சீன-இலங்கை வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற வாரத்தின் துவக்க விழாவும் 19ஆம் நாள் இலங்கையின் தலைநகரான கொழும்பில் நடைபெற்றது. பசுமை தாவரங்களின் பாதுகாப்புப் புத்தாக்கம் மூலம் வேளாண் துறையின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னெடுப்பது நடப்புக் கூட்டத்தின் தலைப்பாகும். இலங்கை அதிகாரிகளும், சீனா, இலங்கை, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 நிபுணர்கள் மற்றும் இளம் அறிஞர்களும் இதன் துவக்க விழாவில் பங்கேற்றனர்.
நிபுணர்களின் பரிமாற்றங்களில் பெறும் சாதனைகள் இலங்கை மற்றும் சீனாவுக்குமிடையே உள்ள மேலதிக ஒத்துழைப்புக்கு உந்து ஆற்றலைக் கொண்டு வருமென எதிர்பார்ப்பதாக இலங்கை தலைமை அமைச்சர் அமாலாசூரியா இக்கூட்டத்துக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் தெரிவித்தார்.
நடப்பு கூட்டம் 24ஆம் நாள் வரை நடைபெறும். அதன் கீழ் பல ஆய்வுக் கூட்டங்களும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
