உலக ஆட்சிமுறையில் தெற்கு நாடுகள் பங்கு

 

உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சியுடன், மேலதிக வளரும் நாடுகள் உலக ஆட்சிமுறையில் பங்கெடுத்து வருகின்றன. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் 47 நாடுகளைச் சேர்ந்த 9182 பேருக்கு நடத்திய கருத்து கணிப்பின்படி, தற்போதைய உலக ஆட்சிமுறை அமைப்புமுறையை மேம்படுத்தி, சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று தெற்கு நாட்டவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு, சீனா முன்வைத்த உலக ஆட்சிமுறை முன்மொழிவைப் பாராட்டி, உலக ஆட்சிமுறை வளர்ச்சிப் போக்கில் சீனா கூடுதல் பங்காற்ற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

வறுமை மற்றும் சமமின்மை, உணவுப் பாதுகாப்பு, பிரதேசப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகிய மூன்று பிரச்சினைகளுக்கு, தெற்கு நாட்டவர்கள் மிகப் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். சர்வதேச விவகாரங்களில் வளர்ந்த நாடுகள் தனது பொறுப்பேற்கவில்லை என்று 73.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், தெற்கு நாடுகளின் நலன்கள் மற்றும் கோரிக்கைகளில் ஐ.நா மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று 81.9 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.

மிகப் பெரிய வளரும் நாடு மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளின் முக்கிய உறுப்பு நாடாக, சர்வதேச விவகாரங்களில் தெற்கு நாடுகளின்

கருத்து வெளிப்பாட்டுரிமையை உயர்த்துவதற்கு சீனா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, பல்வேறு நாடுகள் சர்வதேச விஷயங்களில் சமத்துவ முறையில் கலந்து கொண்டு, நேர்மையான மற்றும் நியாயமான சர்வதேச ஒழுங்கைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று 92.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author