நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம்: ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

Estimated read time 0 min read

நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம் உள்ளதாக ராகுல் காந்தி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி குடும்பா என்ற இடத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், வெறும் 10 சதவீதம் மட்டுமே எண்ணிக்கை கொண்ட சமூகத்தினர் தான், அனைத்து பொறுப்புகளையும் வகிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

இந்திய ராணுவமும் அவர்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது எனவும் தெரிவித்தார். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்திய ராணுவம் குறித்து ஏற்கனவே ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் இந்திய ராணுவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author